இளம்பெண்கள் குளித்ததை செல்போனில் படம் பிடித்த 2 பேர் கைது
இளம்பெண்கள் குளித்ததை செல்போனில் படம் பிடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
கண்டாச்சிபுரம் அருகே உள்ள அருணாபுரத்தை சேர்ந்தவர்கள் முத்துக்குமார்(வயது 20), தட்சிணாமூர்த்தி(22), மகேந்திரன்(22), பிரகாஷ்(20), விஜி என்கிற விஜய்(25). இவர்கள், அதே கிராமத்தை சேர்ந்த 2 இளம்பெண்கள் வீட்டின் முன்பு குளித்ததை தங்களது செல்போனில் படம் எடுத்தனர்.
இதை தட்டிக்கேட்ட இளம்பெண்களையும், அவரது உறவினரையும் திட்டி, மானபங்கப்படுத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், விஜி என்கிற விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்
Related Tags :
Next Story