மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை + "||" + Youth arrested for rape

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
திருவொற்றியூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொபட் மற்றும் வீட்டில் இருந்த செல்போன், ரூ.70 ஆயிரத்துடன் மாயமானார்.
திருவொற்றியூர்,

திருவொற்றியூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொபட் மற்றும் வீட்டில் இருந்த செல்போன், ரூ.70 ஆயிரத்துடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார், மாணவி பாலவாக்கத்தில் உள்ள உறவினரான கபிலன்(வயது 20) என்பவருடன் தங்கியிருப்பது தெரிந்தது.


மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், மேலும் விசாரணை நடத்தினர். அதில், அந்த மாணவியை கபிலன் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று பாலவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கபிலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...