கொரோனாவுக்கு எதிராக போராட 21,752 பேர் விருப்பம் நன்றி தெரிவித்து உத்தவ் தாக்கரே கடிதம்


கொரோனாவுக்கு எதிராக போராட 21,752 பேர் விருப்பம் நன்றி தெரிவித்து உத்தவ் தாக்கரே கடிதம்
x
தினத்தந்தி 24 May 2020 12:12 AM GMT (Updated: 24 May 2020 12:12 AM GMT)

கொரோனாவுக்கு எதிராக போராட விருப்பம் தெரிவித்த 21 ஆயிரத்து 752 பேருக்கு முதல்-மந்திரி நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மேலும் இறப்பு விகிதமும் மற்ற பகுதிகளை விட அதிகமாக உள்ளது.

இதனால் போலீசார், டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை பளுவும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபாட்டுடன் பணியாற்ற டாக்டர்கள், நர்சுகள், மருந்தாளுனர்கள், வார்டு பாய்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் என 21 ஆயிரத்து 752 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 716 பேர் சிவப்பு மண்டலங்களில் பணிபுரிய தயாராக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் செய்யும் பணி கடவுளுக்கும், நாட்டிற்கும் செய்யும் சேவையாகும். இந்த போரில் மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுடனும் ஒரு சிப்பாயாக சேர்ந்துள்ளீர்கள். நீங்கள் போருக்கு வந்துள்ளதால் எனக்கு வலிமை கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story