எண்ணூரில் வீடு புகுந்து திருடிய சட்டக்கல்லூரி மாணவர் கைது


எண்ணூரில் வீடு புகுந்து திருடிய சட்டக்கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 24 May 2020 7:49 PM GMT (Updated: 24 May 2020 7:51 PM GMT)

எண்ணூரில் வீடு புகுந்து திருடிய சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூர், 

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் மின்வாரிய ஊழியர் ஆசைத்தம்பி என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றுக்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாடியில் சென்று தூங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது யாரோ மர்மநபர், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டது தெரிந்தது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் அதே குடியிருப்பில் 6 குடும்பங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ருசி கண்ட பூனையாக அதே நபர் மீண்டும் வேறு ஒருவர் வீட்டில் புகுந்து திருட முயன்றபோது, அவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த குருநாதன் (வயது 28) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பன்னீர்செல்வம் வீட்டில் திருடிய 3 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story