மதுக்கடைகளை ஏலம் விடக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
புதுவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஏலம் விடக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனூர்,
புதுவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஏலம் விடக்கோரி காங்கிரஸ் அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று வில்லியனூர் கோட்டைமேடு சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர் சாய் ஜெ.சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் புதுவை அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறைப்படி போலீசாரிடம் அனுமதி பெறாததால் சாமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட 42 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story