மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டில் கைது ; 4 பேர் மீது குண்டர் சட்டம் + "||" + Arrested in serial theft; Thug act on 4 people

தொடர் திருட்டில் கைது ; 4 பேர் மீது குண்டர் சட்டம்

தொடர் திருட்டில் கைது ; 4 பேர் மீது குண்டர் சட்டம்
தொடர் திருட்டில் ஈடுபட்டு கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சென்றாயன்பட்டியை சேர்ந்த திருப்பதி, செல்லம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் மற்றும் இவரது சகோதரர் சாம்பசிவம் ஆகிய 3 பேரின் வீடுகளில் பணம் மற்றும் நகைகள் திருட்டு போனது.

இது தொடர்பாக வேலூர் அயோதிபட்டிணம் பகுதியை சேர்ந்த எரின் (வயது 23), புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவசக்தி (38), நெடுங்கல் காவாப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (27), போயனப்பள்ளியை சேர்ந்த ராதா (30) ஆகிய 4 பேரையும் கடந்த மார்ச் 12-ந் தேதி நாகரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், கைது செய்து சிறையில் அடைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ்குமார் சேலம் சிறையில் இருந்த போது, எரின் மற்றும் சிவசக்தி ஆகியோர் நண்பர்களாக மாறினார்கள். இவர்கள் திருடும் நகைகளை ராஜ்குமாரின் கள்ளக்காதலியான ராதா மூலம் கடைகளில் அடகு வைத்து பணத்தை பெற்று வந்தது விசாரணையில் தெரிந்தது.

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் பரிந்துரை செய்தார். அதன் பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2. சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3. அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4. மது பாட்டில்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
மது பாட்டில்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
5. சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும்
சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.