நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறிய 7,509 பேர் கைது


நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறிய 7,509 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2020 7:18 AM IST (Updated: 25 May 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.


நாமக்கல்,

நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 6,690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,509 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து 3,784 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story