வழிப்பறியில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2020 10:07 AM IST (Updated: 25 May 2020 10:07 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை தேனிமலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் மிதுலன்(வயது 19), காந்திநகரைச் சேர்ந்த அப்துல்ரகீம் மகன் முகம்மதுபாசில்(24), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் பழனி(30), விருதுவிளங்கினான் கிராமத்தை சேர்ந்த விஜய்குமார் மகன் அஜய்குமார்(19), திருக்கோவிலூரை அடுத்த டி.அத்திப்பாக்கத்தை சேர்ந்த பெஞ்சமின் மகன் குழந்தை ஏசு(23) ஆகியோர் என்பதும், இவர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story