தூத்துக்குடி அருகே, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
தூத்துக்குடி அருகே, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவருடைய மகன் விஜய்(வயது 27). இவருக்கும், இவருடைய உறவினரான முள்ளக்காட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நேற்று அத்திமரப்பட்டியில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் சிறுமிக்கு திருமணம் நடைபெறுவது குறித்து, தூத்துக்குடி சைல்டு-லைனுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் அத்திமரப்பட்டிக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமி திருமண வயதை அடைந்த பிறகே அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு அறிவுறுத்தினர். இதனை ஏற்று கொண்ட இரு வீட்டாரும் பின்னர் திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அதே திருமண மேடையில் மணமகனின் தம்பி அஜித்துக்கும், திருமணத்தில் கலந்து கொள்ள வந்த உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story