திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மேற்கு கோட்டத்தில் உள்ள சமுத்திரம், தண்டராம்பட்டு ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவண்ணாமலை கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், சேத்துப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் பருவகால ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், ரமணாஸ்ரமம், சமுத்திரம், பெரும்பாக்கம் ரோடு, அரசு கலை கல்லூரி, செங்கம் ரோடு, மெய்யூர், நாச்சானந்தல் மற்றும் தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, நாளால்பள்ளம், கொட்டையூர், சதாகுப்பம், அகரம், பள்ளிப்பட்டு, தொண்டமானூர் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதேபோல் தச்சம்பட்டு, சு.வாளவெட்டி, வேடந்தவாடி, வி.பி.குப்பம், நெய்குனி, பூதமங்கலம், ஆனந்தல், மன்னம்பட்டி, கலர்பாளையம், குண்ணங்குப்பம், வேடநத்தம், கார்ணாம்பூண்டி, நாரியமங்கலம், சிங்கவரம், கெங்கநந்தல், காட்டுவெளானந்தல், திடீர்குப்பம், காட்டுக்குளம், சிறுகொத்தான், சோமாசிப்பாடி கோவில் தெரு, வாட்டர் வோர்க்ஸ் பீடர் ஆகிய பகுதிகளிலும் மின்நிறுத்தம் இருக்காது.
வேப்பம்பட்டு, மேல்நந்தியம்பாடி, சூரப்பந்தாங்கல், மரக்கோணம், மோடிப்பட்டு, இசாகுளத்தூர், மஞ்சனூர், பூங்குணம், வயலூர், இஞ்சிமேடு, அல்லியந்தல், மோசவாடி, கிழக்குமேடு கூட்ரோடு, கரிப்பூர், முத்துசாமி நகர், நம்பேடு, நமத்தோடு, ஒதலவாடி, ஆத்துரை, சித்தாத்துரை, வெங்கடாபுரம், பெரும்பாக்கம், மழையூர், தென்கரை, வணக்கம்பாடி, அரசம்பட்டு ஆகிய பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதிகளை சேர்ந்த மின்வாரிய செயற் பொறியாளர்கள் சந்திரசேகரன், ராஜசேகரன், ரவிசந்திரபாபு ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story