தெலுங்கானாவிலிருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் வந்த 2,600 டன் ரேஷன்அரிசி


தெலுங்கானாவிலிருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் வந்த 2,600 டன் ரேஷன்அரிசி
x
தினத்தந்தி 27 May 2020 3:05 PM GMT (Updated: 27 May 2020 3:05 PM GMT)

தெலுங்கானாவிலிருந்து 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி ரேஷன் மூலம் வினியோகிப்பதற்காக நேற்று சரக்கு ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தது.

காட்பாடி,

தமிழகத்தில் பொது வினியோகத்துக்கு தேவையான ரேஷன் அரிசி மத்திய அரசின் தொகுப்பில் இருந்தும், மாநில அரசின் தொகுப்பில் இருந்தும் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் அரிசி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி ரேஷன் மூலம் வினியோகிப்பதற்காக நேற்று சரக்கு ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தது.

ரெயில் பெட்டிகளிலிருந்து இறக்கப்பட்ட ரேஷன்அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. அங்கிருந்து தேவைப்படும் ரேஷன்கடைகளுக்கு வழங்கல் துறை உத்தரவுப்படி இவை அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story