மீன்பிடி தடைக்காலம் குறைப்பு எதிரொலி: தூத்துக்குடியில் மீன்பிடிக்க தயாராகும் மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, வேம்பார், தருவைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 400 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த தடைக்காலத்தை 60 நாட்களாக அறிவித்து இருந்தது.
இதனால் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கிய தடைக்காலம் ஜூன் மாதம் 15-ந் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய அரசு மீன்பிடி தடைக்காலத்தை முன்பு இருந்தது போன்று 45 நாட்களாக குறைத்து உள்ளது. இதனால் தடைக்காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
விசைப்படகுகள் வெள்ளோட்டம்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நீண்ட நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்து வந்தனர். மீன்பிடி வலைகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது முன்கூட்டியே தடைக்காலம் முடிவடைவதால், படகு சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து வருகின்றனர். பெரும்பாலான படகுகளில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. அந்த படகுகளை மீனவர்கள் நேற்று கடலில் இயக்கிப் பார்த்து வெள்ளோட்டம் விட்டனர். மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்வதற்காக தயாராகி வருகின்றனர்.
சமூக இடைவெளி அவசியம்
இதுகுறித்து மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா கூறும்போது, “மீன்பிடி தடைக்காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவதாக குறைக்கப்பட்டதால், 1-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம். அதே நேரத்தில் கொரோனா பிரச்சினை இருப்பதால், மீனவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.
இதனால் ஒவ்வொரு நாளும் எத்தனை விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டும், மீன்களை எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களை அரசு விரைவில் அறிவிக்கும். அதன்படி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

Related Tags :
Next Story