திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா


திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 May 2020 5:30 AM IST (Updated: 28 May 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

திருவொற்றியூர்,

வடசென்னையில் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் சென்னை திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசார் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் மண்டலத்தில் இதுவரை 360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது போலீசாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் தற்காலிகமாக முடக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் நகராட்சி கவுரிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பல்லாவரம் நகராட்சி குரோம்பட்டை நெமிலிச்சேரி பகுதியில் கோயம்பேடு காய்கறி வியாபாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அவருக்கு முடிவெட்டிய பவானி நகரை சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது ஐ.டி. நிறுவன ஊழியருக்கும் கொரோனா உறுதியானது. கிழக்கு தாம்பரம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரெயில்வே பெண் ஊழியரின் மகளுக்கும், மேற்கு தாம்பரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

Next Story