பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2020 6:29 AM IST (Updated: 28 May 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள மிடுதேப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு பணம் வைத்து சூதாடிய முனிராஜ் (வயது26), ஸ்ரீதர் (19), மற்றொரு முனிராஜ் (25) ஆகிய 3 பேரையும் பேரிகை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 320 பறிமுதல் செய்தனர்.

Next Story