விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 May 2020 3:06 AM GMT (Updated: 28 May 2020 3:06 AM GMT)

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் பக்கமுள்ள தட்டாங்குட்டை பஞ்சாயத்து உப்புகுளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது, 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், விவசாய பணிகளுக்கு தேவையான கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரத்தை பறிக்ககூடாது, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் படைவீடு பெருமாள் உள்பட விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்செங்கோட்டில் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமையிலும், பரமத்தி வேலூர் பெருங்குறிச்சியில் பரமசிவம், சண்முகம் ஆகியோர் தலைமையிலும், ஜேடர்பாளையத்தில் கிருஷ்ணன் தலைமையிலும், வையப்பமலையில் பூபதி, செல்வம் ஆகியோர் தலைமையிலும் எருமப்பட்டி செல்லிபாளையத்தில் மாலா, செல்வராஜ் ஆகியோர் தலைமையிலும், வரகூரில் சதாசிவம் தலைமையிலும் பவுத்திரத்தில் அன்பரசு தலைமையிலும் என மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story