பசுமைகுடில்களில் கொத்தடிமைகளாக இருந்த 40 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு
தேன்கனிக்கோட்டை அருகே பசுமைகுடில்களில் கொத்தடிமைகளாக இருந்த 40 வடமாநில தொழிலாளர் குடும்பத்தினரை அதிகாரிகள் மீட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
உத்தரபிரதேச மாநிலம் மெகராவதி பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே முத்துராயன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு பசுமைகுடிலில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் அவர்களது விருப்பப்படி சொந்த மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் தினமும் அனுப்பப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் முத்துராயன்கொட்டாயிலுள்ள 40 வட மாநில தொழிலாளர் குடும்பங்களும் தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என பசுமைகுடில் மேற்பார்வையாளரிடம் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்களோ வடமாநில தொழிலாளர்கள் குடும்பங்களை சொந்த ஊருக்கு அனுப்பாமல் அவர்களுக்கு உணவும் வழங்காமல் அங்கேயே கொத்தடிமைகளாக வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. சாப்பாடு இல்லாமல் சிறைப்பட்டு தவித்து வந்த அவர்கள் நேற்று அதிகாலை பசுமைகுடில்களிலிருந்து வெளியேறி மூட்டை முடிச்சுகளுடன் நடந்து தேன்கனிக்கோட்டைக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து நடந்தே ஓசூர் சென்று ரெயில் மூலம் உத்தரபிரதேசம் செல்ல வடமாநில தொழி லாளர்கள் அனைவரும் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை பொதுமக்கள், தேன்கனிக்கோட்டை வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மண்டல துணை தாசில்தார் சிவப்பா, மற்றும் அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது. பின்னர், மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு வழங்காமல் கொத்தடிமைகளாக வைத்த பசுமைகுடில்களின் உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களை விரைவில் பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கைகளை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story