சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 May 2020 11:37 AM IST (Updated: 29 May 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அந்த சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையின்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து டாக்டர் கள் இதுபற்றி ஈரோடு சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சைல்டுலைன் அமைப்பினர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் அம்மாவிற்கு தெரிந்தவரான ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி வீதியை சேர்ந்த மைதீன் பாஷா (வயது 20) என்பவர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. மேலும் மைதீன் பாஷா அந்த சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தைக்கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைதீன் பாஷாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி மைதீன் பாஷா சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story