நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
கூடலூர்,
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் 152 அடி ஆகும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கோடை மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
கடந்த ஒரு வாரகாலமாக அணைக்கு நீர்வரத்து இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் அணைக்கு வினாடிக்கு 311 கன அடி வீதம் நீர்வரத்து ஏற்பட்டது.
தண்ணீர் திறப்பு தாமதம்
அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 112.50 அடியாக இருந்தது. நீர்வரத்து ஏற்பட்டதால் நேற்று நீர்மட்டம் 112.60 அடியானது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 125 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல்போக நெல் சாகுபடிக்காக வருகிற ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் தண்ணீர் திறக்க தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story