கோவைக்கு நாவல் பழம் வரத்து அதிகரிப்பு


கோவைக்கு நாவல் பழம் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 7:00 AM IST (Updated: 1 Jun 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

கோவைக்கு நாவல் பழம் வரத்து அதிகரித்து இருக்கிறது.

கோவை,

நாவல் பழம் மிகவும் மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவது நல்லது. கல்லீரல் கோளாறுகள், குடல் புண் ஆகியவற்றுக்கும் நாவல் பழம் மருந்தாக உள்ளது. சிறப்பு மிக்க இந்த நாவல் பழம் சீசன் மே மாதத்தில் தொடங்கும். அதன்படி தற்போது சீசன் தொடங்கி உள்ளது. இந்த நாவல் பழமானது நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு கிடைக்கும்.

கொரோனா காரணமாக ஊரடங்கால் கோவைக்கு நாவல் பழம் வரத்து இன்றி இருந்தது. ஆனால் தற்போது சற்று தளர்வு அளிக்கப்பட்டு உள்ளதைத்தொடர்ந்து கோவைக்கு நாவல் பழம் வரத்து அதிகரித்து இருக்கிறது. டவுன்ஹால், ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, ஆவாரம்பாளையம் உள்பட பல பகுதிகளில் வியாபாரிகள் நாவல் பழங்களை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

சிறிய அளவிலான நாவல் பழங்கள் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. பெரிய அளவில் உள்ள நாவல் பழங்கள் கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது.

Next Story