தி.மு.க. எம்.பி.யை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பட்டியல் இனத்தவரை இழிவாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து கன்னிவாடி, பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னிவாடி,
அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் பட்டியல் இனத்தவரை இழிவாக பேசியதாக தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பியை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கன்னிவாடி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கன்னிவாடி நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் எம்.முருகன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சைமலையான்கோட்டையில் உள்ள செம்பட்டி, எஸ்.புதுக்கோட்டை, எஸ்.மேட்டுப்பட்டி, செல்லாயிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்.எஸ்.பாரதி எம்.பி.யை கண்டித்து சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நத்தம், பழனி
நத்தம் பஸ் நிலையம் ரவுண்டானா முன்பு ஆர்.எஸ்.பாரதி எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பழனியில் குளத்துரோடு ரவுண்டானா பகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story