மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புதிய இணை கமிஷனர் பதவியேற்பு


மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  புதிய இணை கமிஷனர் பதவியேற்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 7:05 AM IST (Updated: 2 Jun 2020 7:05 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் இணை கமிஷனராக செல்லதுரை கோவில் அலுவலகத்தில் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.

மதுரை, 

மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் இணை கமிஷனராக நடராஜன் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் 4 இணை கமிஷனர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார், அதில் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனராகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன் சேலம் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் செல்லதுரை நேற்று கோவில் அலுவலகத்தில் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் முன்னாள் இணை கமிஷனர் நடராஜன் கோவில் பொறுப்புகளை வழங்கினார். அவருக்கு அலுவலக மேலாளர், சூப்பிரண்டுகள், பணியாளர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணைகமிஷனர் செல்லதுரை ஏற்கனகே மதுரை திருப்பரங்குன்றம், அழகர்கோவில் துணை கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story