தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டம்


தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2020 9:53 AM IST (Updated: 2 Jun 2020 9:53 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பட்டியல் இன மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பட்டியல் இன மக்களை பற்றி தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியுள்ளார். எனவே அவரை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் ஆர்.எஸ்.பாரதியை கண்டிக்காமல் இருக்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் வகையில் சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டு தி.மு.க.வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தில் பட்டியல் இன மக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காமராஜ் தலைமை தாங்கினார். சக்கரவர்த்தி, நாராயணன், ரமேஷ் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பட்டியல் இன மக்களை அவதூறக பேசிய ஆர்.எஸ்.பாரதியை கண்டித்தும், அவரை கண்டிக்காத அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டன. இதில் 60-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story