போலீஸ் வேலைக்கு ஆன்லைன் தேர்வு; ஆகஸ்டு மாதம் நடக்க வாய்ப்பு


போலீஸ் வேலைக்கு ஆன்லைன் தேர்வு; ஆகஸ்டு மாதம் நடக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2020 4:53 AM IST (Updated: 3 Jun 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காவல்துறையில் காவலர், ரேடியோ டெக்னீசியன் உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது.

புதுச்சேரி,

 இளைஞர்கள் பலர் இந்த வேலையில் சேர விரும்பி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் வயது வரம்பில் தளர்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக காவலர் தேர்வு நடைபெறவில்லை.

இந்தநிலையில் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்துள்ள தகுதியானவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அரசின் நிர்வாகம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வுகளை நடத்த வசதியாக அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் ஆய்வக வசதி உள்ளிட்ட விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Next Story