மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது + "||" + Seven persons arrested in connection with the murder of a worker near Ulundurpet

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர் .
உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாதேவன், மகேந்திரன். அண்ணன்- தம்பிகளான இவர்கள் 2 பேருக்கும் இடையே சம்பவத்தன்று சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சண்டையை விலக்கி விட்டார்.

இந்த நிலையில் மகேந்திரன் தனது ஆதரவாளர்களான சுபாஷ், குமார், அருண், திவாகர், தேன்மொழி, கஸ்தூரி, தனம் ஆகியோருடன் சேர்ந்து முருகனிடம், நீ ஏன் மகாதேவனுக்கு ஆதரவாக செயல்படுகிறாய் என கூறி தகராறில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்த முருகனின் அண்ணணான தொழிலாளி சுந்தரம்(55) என்பவர், ஏன் எனது தம்பியிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என கூறி மகேந்திரன் உள்ளிட்டவர்களை தட்டிக்கேட்டார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அருண் உள்ளிட்டவர்கள் கத்தியால் சுந்தரத்தை குத்தி கொலை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் உள்ளிட்ட 8 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் அருண், மகேந்திரன், சுபாஷ், குமார், திவாகர், கஸ்தூரி, தனம் ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் தேன்மொழியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது
கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சின்னசேலம் ; வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரகு (வயது 24), அதே கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (23).
3. கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது
கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற மினிலாரி உரிமையாளர் கைது
மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற மினிலாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
5. முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மரக்காணம் வாலிபர் கைது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.