விழுப்புரத்தில் இருந்து பீகாருக்கு 450 பேர் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைப்பு


விழுப்புரத்தில் இருந்து பீகாருக்கு 450 பேர் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 3 Jun 2020 4:24 AM GMT (Updated: 3 Jun 2020 4:24 AM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 450 பேரை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க 4 மாவட்ட நிர்வாகத்தினரும் ஏற்பாடு செய்தனர்.

விழுப்புரம்,

இந்நிலையில் நேற்று தஞ்சாவூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது 450 தொழிலாளர்களுக்கும் உரிய பரிசோதனை மேற்கொண்டு சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களை விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் கணேஷ் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக திண்டிவனம் பகுதியில் ஓட்டல், அரிசி ஆலைகள் மற்றும் சிப்காட் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 40 பேர் விழுப்புரத்துக்கு பஸ்சில் அழைத்து வரப்பட்டு சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு திண்டிவனத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வைத்து அரசு மருத்துவர் விஷ்ணு குமரன் மற்றும் செவிலியர்கள் உரிய பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில், தாசில்தார் ராஜசேகரன், தேர்தல் துணை தாசில்தார் ரபியுல்லா, மண்டல துணை தாசில்தார் வேலு, ஒலக்கூர் வட்டார மேற்பார்வையாளர் வீரப்பன், வருவாய் ஆய்வாளர் சித்தார்த்தன், கிராம நிர்வாக அலுவலர்கள் சதாம், லட்சுமிபதி, வாஞ்சிநாதன், ஹரி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வழிஅனுப்பி வைத்தனர்.

Next Story