கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பதை 2 மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் - சித்தராாமையா வேண்டுகோள்
கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பதை 2 மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகளை திறக்க கர்நாடக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு பெற்றோரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில், பள்ளிகளை திறப்பது என்பது குழந்தைகளின் உயிரோடு விளையாடுவது போன்றது என்று பெற்றோர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், பெற்றோரின் கருத்தை கேட்டு அறிந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்பதை 2 மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சரியல்ல. பள்ளி கல்வித்துறை அவசரகதியில் முடிவு எடுக்கக்கூடாது. ஜூலையில் பள்ளிகளை திறப்பதாக அரசு கூறியுள்ளது. இதனால் குழந்தைகளின் பெற்றோர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதை முதல்-மந்திரி எடியூரப்பா கவனிக்க வேண்டும். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகள், பள்ளிகளை திறந்ததால் தான், அங்கு குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த நாடுகளில் பள்ளிகளை மீண்டும் மூடியுள்ளனர். அதனால் கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பதை 2 மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும். அதன்பிறகு நிலைமையை ஆராய்ந்து பார்த்த பிறகு, பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :
Next Story