தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒளி,ஒலி, பந்தல் அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒளி,ஒலி, பந்தல் அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2020 7:37 AM IST (Updated: 6 Jun 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒளி,ஒலி, பந்தல் அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நல சங்கம், ஒளி, ஒலி பந்தல் அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மைதீன்பாஷா, மாவட்ட துணைத்தலைவர்கள் கண்ணன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்த அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்த பந்தல்மேடை அமைக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் அந்த வழியாக வந்த பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு பூக்களை வழங்கி கோரிக்கையை தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில துணை செயலாளர் மணிவேல், மாவட்ட துணை செயலாளர்கள் மயில்வாகனன், செந்தில்வேல், மாவட்ட துணை பொருளாளர்கள் வெங்கடேஷ், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story