மராட்டியத்தில் அடுத்த மாதம் 15-ந் தேதி மருத்துவ தேர்வுகள் தொடங்குகிறது தேர்வு கட்டுப்பாட்டாளர் தகவல்
மராட்டியத்தில் அடுத்த மாதம் 15-ந் தேதி மருத்துவ தேர்வுகள் தொடங்குகிறது என்று மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
மும்பை,
கொரோனா காரணமாக மராட்டிய மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சக அதிகாரத்தின் கீழ் வரும் வேளாண் அல்லாத பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது.
அதேநேரத்தில் மாநிலத்தில் மருத்துவ தேர்வுகளை நடத்துவதற்கு மருத்துவ கல்வித்துறை மந்திரி அமித் தேஷ்முக் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்து அந்த தேர்வுகளை நடத்துவதற்கான ஒப்புதலை பெற்றார்.
இந்தநிலையில், மருத்துவ தேர்வுகள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறும் என மராட்டிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் அஜித் பகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பாடங்களுக்கான எழுத்து மற்றும் செயல்முறை தேர்வு அட்டவணைகள் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Tags :
Next Story