நாமக்கல் மாவட்டம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘ஹால்டிக்கெட்’ வினியோகம்


நாமக்கல் மாவட்டம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘ஹால்டிக்கெட்’ வினியோகம்
x
தினத்தந்தி 9 Jun 2020 7:58 AM IST (Updated: 9 Jun 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

நாமக்கல்,

மார்ச் மாதம் நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இதையொட்டி ஒத்திவைக்கப்பட்டது.  இந்த தேர்வு வருகிற 15-ந் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 308 மையங்களில் 21 ஆயிரத்து 305 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இவர்களுக்கு நேற்று அந்தந்த பள்ளிகளில் தேர்வுக்கான ‘ஹால்டிக்கெட்’ வழங்கப்பட்டது.

நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மரகதம் 196 மாணவர்களுக்கு ‘ஹால்டிக்கெட்’ மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

Next Story