விக்கிரவாண்டியில் தங்கியிருந்த சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு


விக்கிரவாண்டியில் தங்கியிருந்த சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 4:41 AM GMT (Updated: 9 Jun 2020 4:41 AM GMT)

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 31 பேர் பணியாற்றி வந்தனர்.

விக்கிரவாண்டி,

தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் வேலையின்றி அவதிப்பட்டு வந்தனர். இவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இந்நிலையில் நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சத்தீஸ்கருக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது.

இந்த ரெயிலில் அந்த 31 தொழிலாளர்களையும் அனுப்பி வைப்பதற்காக நேற்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு அளித்து பின்னர் அரசு பஸ்சில் ஏற்றி சென்னைக்கு அழைத்துச்சென்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சிறப்பு ரெயிலில் அவர்களை சத்தீஸ்கருக்கு வழியனுப்பி வைத்தனர்.

இப்பணியில் தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் உதயசங்கர், பால்ராஜ் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Next Story