மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 4:21 AM IST (Updated: 10 Jun 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


புதுச்சேரி,

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்கள் விசுவநாதன், நாகநாதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் அபிஷேகம், சேது செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு 10 கிலோ அரிசியும், மாதம் 7,500 ரூபாயும் மத்திய அரசு வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தை 200 நாட்கள் ஆக உயர்த்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story