கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு


கலெக்டர் அலுவலக வளாகத்தில்  தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Jun 2020 8:18 AM IST (Updated: 10 Jun 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர், 

சிவகாசி சாட்சியாபுரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் தனக்கு சொந்தமான லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த ஜெயகணேஷ் என்பவருக்கு முன்பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்தார். ஆனால் விற்பனை தொகை முழுவதையும் ஜெயகணேஷ் திருப்பி செலுத்தாத நிலையில் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தநிலையில் ஆரோக்கியசாமியின் மனைவி போதும்பொண்ணு (வயது 39) லாரி விற்பனை தொகை முழுவதையும் பெற்ற தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து சூலக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

Next Story