கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஒற்றை காலில் நிற்கும் போராட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் ஒற்றைகாலில் நிற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. இதனால் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில்களை திறக்கவும், பக்தர்கள் தரிசனத்திற்கு உரிய அனுமதி அளிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள் முன்பு நேற்று ஒற்றைகாலில் நிற்கும் போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனசாமி கோவில் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பங்கேற்று கோவில்களை திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோன்று அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவில் முன்பு மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜூ தலைமையிலும், மொரப்பூர் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவிலில் மாவட்ட செயலாளர் சந்தோஷ் தலைமையிலும் இந்த நூதன போராட்டம் நடைபெற்றது.
இதேபோல் பாலக்கோடு ஞானப்பிள்ளையார் கோவில், புதூர் மாரியம்மன்கோவில், பனந்தோப்பு வல்லவ கணபதி கோவில், பாளையம்புதூர் சென்றாயபெருமாள் கோவில், பாப்பாரப்பட்டி ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் முன்பு நடைபெற்ற ஒற்றைகாலில் நிற்கும் போராட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் கோவில்களை திறக்கக்கோரி ஸ்ரீபேட்டராயசாமி கோவில், கீழக்கோட்டை தேவராஜிஷ்வரர் கோவில், தேர்பேட்டையில் உள்ள பையில் ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்கள் முன்பு ஒற்றைக்காலில் நின்று கொண்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஒன்றிய தலைவர் கார்த்திக், நகர தலைவர் அரிஷ், ஒன்றிய நிர்வாகி எல்லேஷ், ஒன்றிய துணைத்தலைவர் ரகு, நகர செயலாளர் ரவி மற்றும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story