உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணங்கள் நடைபெறாததால் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவோர் கடும் பாதிப்பு


உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணங்கள் நடைபெறாததால்   சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவோர் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2020 5:26 AM GMT (Updated: 12 Jun 2020 5:26 AM GMT)

உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணங்கள் நடைபெறாத தால் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவோர் கடுமையாக பாதிப்படைந்துள்ளார்கள்.

கோபி, 

திருமணம், காதுகுத்துவிழா, கிடாய் விருந்து, வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது உறவினர் கள், நண்பர்கள் திரண்டு வருவார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சமையல் பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறும்.

சில நேரங்களில் திருமண மண்டபங்களில் உள்ள பாத்திரங்கள் போதாமல் விசேஷம் நடத்துபவர்கள் வெளியே சென்று பாத்திரங் களை வாடகைக்கு எடுத்து வருவார்கள்.

பரிதவிப்பு

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2½ மாதங்களாக எந்த சுப நிகழ்ச்சிகளும் தடபுடலாக நடைபெற வில்லை. திருமணம் செய்பவர்கள் கூட மணமக்களின் பெற்றோருடன் கோவில் களில் எளிமையாக திரு மணம் செய்துகொள்கிறார் கள். இதனால் மண்டப உரிமையாளர்கள், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடுபவர்கள், சமையல் வேலைக்கு செல்பவர்கள், பரிமாறுவதற்காக செல்லும் கூலி தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவிக் கிறார்கள்.

வருமானம் இழப்பு

இதுகுறித்து கோபி டவுன் வாய்க்கால் ரோட்டில் சமையல் பாத்திரக்கடை வைத்திருக்கும் ஒருவர் கூறும்போது, ‘நான் எனது தந்தை காலத்தில் இருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விட்டு வருகிறேன். ஒருமுறை கூட இதுபோல் வருமான இழப்பை சந்தித்தது இல்லை. பாத்திரங்கள், மேஜைகள், நாற்காலிகள் புழுதி படிந்து கிடக்கின்றன. என்னைப்போல் இந்த தொழில் செய்யும் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரசு அனுமதி

ஊரடங்கில் பல தளர்வுகள் விடப் பட்டுள்ளது. அதுபோல் குறைந்த அளவில் உறவினர்கள், நண்பர்கள் சூழ சமூக இடைவெளியுடன் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்த அரசு அனுமதி அளித்தால் நாங்கள் ஆறுதல் அடை வோம். இதுபோல் வருமானம் இன்றி தவிக்கும் சமையல் தொழிலாளர்களும், பரிமாறும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் மகிழ்வார்கள்‘ என்றார்.

Next Story