ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயிலில் வந்த 3,500 டன் ரேஷன் அரிசி
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 3,500 டன் ரேஷன் அரிசி ரெயிலில் கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்படும்.
அதன் பின்னர் ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் பழனி ரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும்.
3,500 டன் ரேஷன் அரிசி
அந்த வகையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 3 ஆயிரத்து 500 டன் ரேஷன் அரிசி திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் லாரிகள் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகள் பழனி ரோட்டில் உள்ள கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, திண்டுக்கல், தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவைக்கு ஏற்ப அரிசி அனுப்பி வைக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானம் இன்றி அவதிப்படும் பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story