கடனை செலுத்த கால அவகாசம் வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தை சுய உதவிக்குழுவினர் முற்றுகை


கடனை செலுத்த கால அவகாசம் வழங்கக்கோரி   தாசில்தார் அலுவலகத்தை சுய உதவிக்குழுவினர் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jun 2020 1:26 AM GMT (Updated: 13 Jun 2020 1:26 AM GMT)

கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்க வலியுறுத்தி சாத்தூர் தாசில்தார் அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.

சாத்தூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே வீட்டு வாடகை முதல் கடன்தொகை வரை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என அரசு அறிவித்தது.

கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள், கடன்களை செலுத்த சொல்லி மிரட்டுவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர், அனைத்திந்திய மாதர் சங்க நிர்வாகிகளுடன் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கால அவகாசம்

அப்போது அவர்கள் கடனை கட்ட இயலவில்லை என்றும், கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் சாத்தூர் தாசில்தார் ராமசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட தாசில்தார் அனைத்து நிதி நிறுவனங்களையும் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story