கர்நாடக மேல்-சபை தேர்தல்: வேட்பாளர்கள்-வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - தலைமை செயலாளர் வெளியிட்டார்


கர்நாடக மேல்-சபை தேர்தல்: வேட்பாளர்கள்-வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - தலைமை செயலாளர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 14 Jun 2020 5:08 AM IST (Updated: 14 Jun 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மேல்-சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள்-வாக்காளர்கள் ஆகியோர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், வேட்பாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆகியோர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தேர்தலின்போது ஊழியர்கள், வாக்காளர்கள், வேட்பாளர்களின் முகவர்களை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்க வேண்டும். சானிடைசர் திரவத்தை வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

வெளியே வர அனுமதிக்கலாம்

தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ஊழியர்கள், வாக்காளர்கள், முகவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்தால், அவர்கள் தேர்தல் பணிக்காக மட்டும் வெளியே வர அனுமதிக்கலாம். அதே போல் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடலாம்.

அனைத்து மாவட்ட கலெக்டர்கள், தனிமை கண்காணிப்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் விவரங்களை வழங்க வேண்டும். அனைத்து வேட்பாளர்களும், வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Next Story