மாவட்ட செய்திகள்

எடப்பாடி அருகே காரை நிறுத்தி பெண்களிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர் + "||" + Car parked near Edappadi Hearing grievances from women First Minister

எடப்பாடி அருகே காரை நிறுத்தி பெண்களிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர்

எடப்பாடி அருகே காரை நிறுத்தி பெண்களிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர்
எடப்பாடி அருகே காரை நிறுத்தி சாலையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறைகளை கேட்டறிந்தார்.
சேலம், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டுள்ளார். கடந்த 11-ந் தேதி சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் மேட்டூரில் இருந்து எடப்பாடிக்கு புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவியை வழங்கினார். அதைத்தொடர்ந்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவி தமிழரசி, அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவருக்கு அரசு வேலை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு எடப்பாடியில் இருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு முதல்-அமைச்சர் வந்து கொண்டிருந்தார். அப்போது எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கன்னந்தேரி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் தகவலை அறிந்த அப்பகுதி பெண்கள் அங்கு சாலையோரத்தில் கூடினர். பிறகு வரும் வழியில் அவர்களை கண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரை நிறுத்த சொல்லி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பெண்கள் கூறும்போது, இந்த பகுதியில் தொழிலாளர்களுக்கான கொரோனா நிவாரணம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து பெண்களிடம் பொறுமையாக குறைகளை கேட்ட முதல்-அமைச்சர், நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்பாக மனு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தினார்.

சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்களிடம், முதல்-அமைச்சர், தனது காரை நிறுத்தி குறைகளை கேட்ட வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது ‘வாட்ஸ்-அப்பில்’ வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆட்சியில் இருக்கும்போது நல்லது செய்யவில்லை: தி.மு.க.வின் கபடநாடகம் மக்களிடம் எடுபடாது - போடி பிரசாரத்தில், எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மக்களுக்கு தி.மு.க. நல்லது செய்யவில்லை என்றும், தி.மு.க.வின் கபடநாடகம் மக்களிடம் எடுபடாது என்றும் போடியில் நடந்த பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. ‘சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்’; முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
‘சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்‘ என்று முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
3. மு.க.ஸ்டாலின் சொன்னதால் கடன்களை ரத்து செய்யவில்லை: மக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த காலகட்டங்களில் அரசு உதவி செய்கிறது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
மக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த காலகட்டங்களில் அவர்களுக்கு அரசு உதவி செய்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு : முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
5. சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படங்கள் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவப்படங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.