அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2020 4:00 AM IST (Updated: 16 Jun 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்து கழகத்தில் 50 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் அனைத்து தொழிலாளர்களும் தினமும் பணிக்கு வந்து வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும் என வற்புறுத்துவதையும், பணிக்கு வந்து பஸ் வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு பஸ்சில் பயணிகளை ஏற்றிவிடும் பணி வழங்குதல், பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றி அதிக வசூல் செய்து தர வலியுறுத்துவதை கண்டித்தும், பஸ் நிலையங்களில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்காமல் இருப்பதை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சங்கர் கணேஷ், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி. யு.சி. பணியாளர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story