போக்குவரத்துத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்துத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2020 6:52 AM IST (Updated: 16 Jun 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் பிரேமா, ஜார்ஜ், பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தரும.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், முற்போக்கு சிந்தனையாளர் சங்க மாவட்ட தலைவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வரை பணியமைப்பு விதிகளுக்கு உட்பட்டு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் சங்க பொறுப்பாளர் புரவலன் நன்றி கூறினார்.

Next Story