தென்காசி மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் இடமாற்றம்


தென்காசி மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 21 Jun 2020 4:00 AM IST (Updated: 21 Jun 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 19 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தென்காசி, 

தென்காசி தாசில்தார் சண்முகம், மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராகவும், கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்), திருவேங்கடம் தாசில்தார் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிகரன், தென்காசி உதவி கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளராகவும், சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேல், தென்காசி தனி தாசில்தாராகவும் (ஆதி திராவிடர் நலத்துறை) இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தென்காசி தனி தாசில்தார் (குடிமை பொருள் வழங்கல்) சுப்பையன், தென்காசி தாசில்தாராகவும், திருவேங்கடம் தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலசுப்பிரமணியன், கடையநல்லூர் தாசில்தாராகவும், மாவட்ட கலெக் டர் அலுவலக தேர்தல் பிரிவு தாசில்தார் கண்ணன், திருவேங்கடம் தாசில்தாராகவும், தென்காசி தனி தாசில்தார் (ஆதி திராவிடர் நலத்துறை) அமிர்தராஜ், வீரகேரளம்புதூர் தாசில்தாராகவும், கடையநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரோசன்பேகம், செங்கோட்டை தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

தென்காசி கோட்ட கலால் அலுவலர் முருகுசெல்வி, தென்காசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், தென்காசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, தென்காசி கோட்ட கலால் அலுவலராகவும், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தார் ஆதி நாராயணன், தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) அருணாசலம், செங்கோட்டை குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், செங்கோட்டை தாசில்தார் கங்கா, கடையநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் திருநாவுக்கரசு புளியங்குடி தனி தாசில்தாராகவும் (நகர நிலவரித்திட்டம்), தென்காசி உதவி கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் ஆனந்த், சிவகிரி தாசில்தாராகவும், தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலக நேர்முக உதவியாளர் வெங்கடேஷ், திருவேங்கடம் தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), கடையநல்லூர் தனி தாசில்தார் (நில எடுப்பு கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை) ரவிகுமார், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 19 தாசில்தார்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பிறப்பித்துள்ளார்.

Next Story