முழுஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் - பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நடவடிக்கை


முழுஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் - பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2020 3:45 AM IST (Updated: 23 Jun 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

முழுஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதித்து பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பூந்தமல்லி, 

முழு ஊரடங்கு காரணமாக பூந்தமல்லி நகராட்சி பகுதியில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு வருபவர்களும் இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பூந்தமல்லியில் நகராட்சி பகுதியில் அத்தியாவசிய கடைகளின் முன்பு அதிக அளவில் பொருட்கள் வாங்க வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக வந்த தகவலின்பேரில் நகராட்சி கமிஷனர் வசந்தி நேரடியாக அந்த பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது முழுஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதித்தார். மேலும் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களையும் மடக்கிப்பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது வாகன ஓட்டிகளிடம், கொரோனாவால் பலர் பலியாகும் நிலையில், பொருட்கள் வாங்க நடந்து வரக்கூடாதா? வாகனங்களில்தான் வரவேண்டுமா? என நகராட்சி கமிஷனர் வசந்தி செய்கை மூலம் கேட்டு எச்சரித்தார்.
1 More update

Next Story