தமிழகத்தில் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளி களுக்கு கொரோனா நிவாரணமாக தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா கூறினார்.
ராசிபுரம்,
ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துக்காளிப்பட்டி மற்றும் மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற நிகழ்ச் சியில் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக்குழு வினருக்கு ரூ.8.60 லட்சம் கொரோனா சிறப்பு கடன் தொகைக்கான காசோலை களை வழங்கினார். மேலும் முத்துக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் ரூ.13 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினார். ராசிபுரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொரோனா நிவாரண கடன்கள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டத்திலும் அமைச்சர் கலந்து கொண் டார். இதில் மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் பிரகாசம், முத்துக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் கண்ணன், உதவி மகளிர் திட்ட அலுவலர் கோபிநாத், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க 13 பயனாளிகளுக்கு அதற்கான ஆணையை அமைச்சர் சரோஜா வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம், வெண்ணந்தூர் ஒன்றியக்குழு தலைவர் தங்கம்மாள் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாஸ்கர், வனிதா மற்றும் அத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ், கட்சி நிர்வாகிகள் வேம்பு சேகரன், வடுகம் பாலன், காண்டிராக்டர் மகேந்திரன், கரட்டுக்காடு மணி, குச்சிக்காடு சின்னப்பையன், பொன்குறிச்சி முருகேசன், கணபதி, நல்லதம்பி, பட்டணம் பாலசுப்பிரமணியன், மகளிர் அணி பாலாமணி,பெரியூர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிவாரணம்
இந்த நிகழ்ச்சிகளின்போது அமைச்சர் சரோஜா நிருபர் களிடம் கூறும்போது, அடை யாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியாக தலா ரூ.1,000 விரைவில் வழங் கப்படும். இதற்காக ரூ.133.50 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த உதவித் தொகை அவர்களின் இடத்திற்கு நேரில் சென்று வழங்கப்படும் என்றார்.
ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு இயக்கம் நடந்தது. இதில் அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பினர் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில் புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் அம்சவேணி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராதா சந்திரசேகர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உணவு பொருட்கள்
ராசிபுரம் அருகே புதுப்பாளையம் ஊராட்சி கல்லாங்குளத்தில் சாந்தி என்பவரின் வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தீயை அணைக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் காயமடைந்தார். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கும், காயமடைந்தவருக்கும் அமைச்சர் சரோஜா, உதவித்தொகையும், உணவு பொருட்கள் தொகுப்பையும் வழங்கினார். வீட்டை இழந்தவருக்கு பட்டா வழங்கி வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சிகளில் வெண்ணந்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் தாமோதரன், கட்சி நிர்வா கிகள், கூட்டுறவு சங்க நிர்வா கிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story