கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்


கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Jun 2020 9:28 AM IST (Updated: 23 Jun 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், அவர் களை சேர்ந்தவர்களுக்கும் அத்தியாவசிய தேவையான உணவு பொருட் கள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக்குழுவினர் சிறப்பாக கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒத்துழைக்க வேண்டும்

பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கொ ரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வென்டிலேட்டர் கருவிகள்

இதனை தொடர்ந்து சோலாரா ஆக்டிவ் பார்மா சயின்ஸ் லிமிடெட் சார்பில் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 2 வென்டிலேட்டர் கருவிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். அப்போது சோலாரா ஆக்டிவ் பார்மா சயின்ஸ் லிமிடெட் முதன்மை துணை தலைவர் வேல்முருகன், பொது மேலாளர் இன்பராஜ், துணை பொதுமேலாளர் கலியபெருமாள், பாலமுருகன், அருள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். 

Next Story