புதிய பஸ் நிலையத்துக்கு மீண்டும் காய்கறி கடைகள் இடமாற்றம் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு
பெரிய மார்க்கெட் காய்கறி கடைகள் மீண்டும் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
புதுச்சேரி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் ஒரு அம்சமாக கடந்த மார்ச் 31-ந்தேதி பெரிய மார்க்கெட் மூடப்பட்டு அங்கிருந்து கடைகள் அனைத்தும் 5 பிரிவாக பிரித்து வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. காய்கறி கடைகள் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்தது.
5-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி புதுவையில் கடைகள், ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. காய்கறி கடைகளும் மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டன. ஆனால் அங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை என அரசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கோயம்பேடு நிலை ஏற்பட்டு விடும் என்று வியாபாரிகளை எச்சரித்தனர்.
காய்கறி கடைகள்
இந்தநிலையில் புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதார துறை தளர்வுகளில் இருந்து சிலவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கடைகள், பெட்ரோல் பங்குகள் திறக்கப்படும் நேரத்தை குறைத்து முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
ஏற்கனவே அறிவித்து இருந்தபடி பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள், அடிக்காசு கடைகள் மீண்டும் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இந்த கடைகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. அந்த கடைகள் முன் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் கட்டங்கள் வரையப்பட்டிருந்தன. முதல் நாள் என்பதால் கடை அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஆர்வம் காட்டினார்கள். இதனால் பொதுமக்களும் அதிக அளவில் வரவில்லை.
ட்ரோன் மூலம் கண்காணிப்பு
இந்தநிலையில் காய்கறி கடைகளை கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் கண்காணித்தனர். அங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும். பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து எச்சரித்தபடி இருந்தனர்.
இதுமட்டுமின்றி ட்ரோன் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அரசு விதிமுறைகளை மீறுவோரை படம் பிடித்து அதிரடியாக அபராதம் வசூலிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது என போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Tags :
Next Story