எல்லையில் நடந்த மோதலுக்கு பிறகு இந்தியா மீது சைபர் தாக்குதலை தூண்டிவிடும் சீனா - பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை


எல்லையில் நடந்த மோதலுக்கு பிறகு இந்தியா மீது சைபர் தாக்குதலை தூண்டிவிடும் சீனா - பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2020 4:27 AM IST (Updated: 24 Jun 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

எல்லையில் நடந்த மோதலுக்கு பிறகு இந்தியா மீது சீனா சைபர் தாக்குதலை தூண்டிவிட்டுள்ளது. மோசடி ஆசாமிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி போலீசார் பொது மக்களை எச்சரித்து உள்ளனர்.

மும்பை,

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் எல்லையில் நடந்த மோதலுக்கு பிறகு சீனாவில் இருந்து இந்தியா மீது சைபா் தாக்குதல் அதிகரித்து உள்ளது. 2 நாடுகளுக்கு இடையே லடாக்கின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு எல்லை கடந்த ஆன்லைன் தாக்குதல்கள் தூண்டிவிடப்பட்டுள்ளதாக மராட்டிய சைபர் பிரிவு ஐ.ஜி. யஸ்காஷ்வி யாதவ் கூறியுள்ளார்.

சீனாவின் சென்குடு பகுதியில் இருந்து அதிகளவில் இந்த ஆன்லைன் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை

மேலும் அவா் கூறுகையில், ‘‘எங்களுக்கு கிடைத்த தகவலின்படி கடந்த 5 நாட்களில் இந்திய பகுதிகளில் 40 ஆயிரத்து 300 சைபர் தாக்குதல்கள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய இணைதள பயன்பாட்டாளர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். இதை தடுக்க பைேயாவால்களை உருவாக்கி கொள்ள வேண்டும். சைபர் பாதுகாப்பு தணிக்கைகளை செய்து கொள்ளலாம்’’ என்றார்.

இதேபோல சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயரில் போலி இ-மெயில்கள், குறுந்தகவல்கள் அனுப்பி நமது தகவல்களை திருட முயற்சி செய்வார்கள். இதுபோன்ற போலி இ-மெயில்களிடம் பொது மக்கள் கவனமாக இருக்க சைபர் பிரிவு அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இதில் ஒரு போலி இ-மெயில் முகவரி தான் ncov2019@gov.in. மோசடி ஆசாமிகள் மும்பை, டெல்லி, ஐதராபாத், சென்னை, ஆமதாபாத் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த இ-மெயில் முகவரில் இருந்து கொரோனாவுக்கு இலவசமாக சோதனை நடத்தப்படுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மராட்டிய சைபர் கிரைம் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி ஹேக்கர்களிடம் 20 லட்சம் இந்தியர்களின் இ-மெயில் முகவரி இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story