செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை


செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 Jun 2020 12:43 AM GMT (Updated: 26 Jun 2020 12:43 AM GMT)

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால், என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகை காடம்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் அஸ்விதா(வயது 20). இவர், நாகையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அஸ்விதா, வீட்டில் வேலை எதுவும் செய்யாமல், செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்தார்.

இதை பார்த்த அவரது தாய் லட்சுமி, வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் தினமும் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறாயே? என்று கண்டித்துள்ளார். இதில் மனம் உடைந்த அஸ்விதா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்விதா பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Next Story