திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 77 மி.மீட்டர் பதிவு


திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 77 மி.மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 26 Jun 2020 6:16 AM IST (Updated: 26 Jun 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 77 மி.மீட்டர் மழை பதிவானது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சில நாட்களாக இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது

இந்த கனமழையின் காரணமாக நேற்று பகல் முழுவதும் திருவாரூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் தாக்கம் குறைவாக இருந்தபோதிலும் மழை பெய்யவில்லை. தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை அளவு

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

திருத்துறைப்பூண்டி-77, முத்துப்பேட்டை-35, திருவாரூர்-16.2, மன்னார்குடி-10, நீடாமங்கலம்-8, குடவாசல்-4.8, வலங்கைமான்-3, பாண்டவையாறு தலைப்பு-2.

Next Story