மாவட்ட செய்திகள்

தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்: நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைப்பு + "||" + Curfew with new restrictions on honey: shops in municipal areas

தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்: நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைப்பு

தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்: நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைப்பு
தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 421 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சி பகுதிகளிலும் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது.


மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், மருந்துக்கடைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. டீக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட இதர கடைகளை மூடவும், ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

கடைகள் அடைப்பு

இதையடுத்து தேனி, கம்பம் உள்ளிட்ட 5 நகராட்சிகளிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறந்து இருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேனி நகரின் பிரதான கடைவீதிகளான பகவதியம்மன் கோவில் தெரு, எடமால் தெரு ஆகியவை வெறிச்சோடி கிடந்தன. சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.

அதேநேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, தேனிக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்ததால் காலை நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பிற்பகலுக்கு பிறகு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பஸ்கள் நிறுத்தம்

தேனியில் இருந்து பிற மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு நேற்று முன்தினம் வரை பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று வெளிமாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. மாவட்டத்துக்குள் ஏற்கனவே 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று அந்த எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டன.

குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயங்கியதால், பகல் நேரத்தில் பஸ் நிலையத்தில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்சில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்ததால் பெரும்பாலான பஸ்கள் குறைவான பயணிகளுடன் இயங்கின.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கில் நடந்த ராணா திருமணம்
ஊரடங்கில் நடிகர் ராணாவின் திருமணம் நடைபெற்றது.
2. செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை
செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
3. ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்
ஊரடங்கால் வேலை இல்லாமல் வறுமையில் வாடியதால் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து ஆடு திருடிய வாலிபர், மனைவியுடன் கைதானார்.
4. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது தொல்லியல் துறை தகவல்
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் வருகிற 31-ந்தேதி வரை திறக்கப்பட மாட்டாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
5. மராட்டியத்தில் புதிய தளர்வுகளுடன் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு வணிக வளாகங்களை திறக்க அனுமதி
மராட்டியத்தில் புதிய தளர்வுகளுடன் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களை திறக்கவும், ஆட்டோ, டாக்சிகளில் கூடுதலாக ஒருவர் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.