மாவட்ட செய்திகள்

ரூ.25 லட்சத்தில் சின்னதாராபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார் + "||" + The Minister of Inauguration of the Chinnatharapuram Vayakkal was launched at Rs

ரூ.25 லட்சத்தில் சின்னதாராபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்

ரூ.25 லட்சத்தில் சின்னதாராபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
ரூ.25 லட்சத்தில் சின்னதாராபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட சின்னதாராபுரம் வாய்க்காலில், ரூ.25 லட்சத்தில் தூர்வாரி, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மேற்கண்ட பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், நடப்பாண்டில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 10 பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில், சின்னதாராபுரம் வாய்க்கால் ரூ.25 லட்சத்தில் தூர்வாரப்பட்டு, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,877 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். இந்த பணிகள் சிறுதாறை வாய்க்கால் நீர்ப்பாசன விவசாயிகள் நல சங்கம் மூலம் நடத்தப்படவுள்ளது என்றார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதி பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் பொடி வழங்கி, அவற்றை எப்படி காய்ச்ச வேண்டும், எவ்வளவு பருகவேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்
சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்.
2. மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்தாரர்களின் மின்சார கட்டணம் திருத்தம் அமைச்சர் தகவல்
தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
3. மின்தடை தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
மின்தடை தொடர்பான பொதுமக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.
4. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலங்கள் சென்னையில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நேற்று மீட்கப்பட்டது.
5. கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய நகைகள் மூலம் வருவாய் ஈட்ட முடிவு அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில் ‘டெபாசிட்’ செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.